Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சர்க்கரை விலையால் எகிறும் தீபாவளி இனிப்புகள் விலை

சர்க்கரை விலையால் எகிறும் தீபாவளி இனிப்புகள் விலை

இனிப்புக் கடைகளில் முன்பு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட இனிப்புகள் தற்போது ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

சர்க்கரை, பால், நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் கரூரில் தீபாவளி ஸ்வீட் வகைகளின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிலோ ரூ.45-க்கு விற்பனையான சர்க்கரை, தற்போது கிலோ ரூ.67 முதல் ரூ.72 வரை விற்பனையாகிறது. இதன் எதிரொலியாக, இனிப்புக் கடைகளில் ஸ்வீட் வகைகள் கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்க்கரை விலையைப் போல பால், நெய், மைதா, கடலை மாவு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால், இனிப்புகள் தயாரிப்பு செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், கரூரில் உள்ள இனிப்புக் கடைகளில் ஸ்வீட்ஸ் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட இனிப்பு வகைகள் தற்போது ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. நடுத்தர இனிப்புக் கடைகளில் கிலோ ரூ.1,120-க்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்வீட் வகைகள் ரூ.40 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1,160-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

அதேபோல், பெரிய இனிப்புக் கடைகளில் முன்பு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட இனிப்புகள் தற்போது ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. நடுத்தர மற்றும் பெரிய ஸ்வீட் ஸ்டால்களில் ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்வீட் ஸ்டால் நடத்தும் சங்கர் கூறியதாவது:

இனிப்பு பதார்த்தம் தயாரிக்கத் தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் தீபாவளி ஸ்வீட்ஸ் தயாரிப்பு செலவு பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் இனிப்புகளை விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபம் குறைந்துள்ளது. 

இதனால் வேறு வழியின்றி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நகரங்களில் கேஸ் அடுப்பு மட்டுமே பயன்படுத்த முடியும். கேஸ் விலையும் அதிகரித்துவிட்டது. புறநகர் பகுதியில் வேண்டுமானால் விறகு அடுப்பு போன்றவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளின் விலை குறைவாக இருக்கலாம் என்றார்.

முந்தைய செய்தி
அரிசி விலை உயர்வு - ஜிஎஸ்டி விலக்கு அவசியம்
அடுத்த செய்தி
காமராசர் அறிவுலகம் கட்டுமான பணிகள் விறுவிறு

தொடர்புடைய செய்திகள்